எப்போது மும்மலம் விட்டேறுவேன் பூரணமாய்
எப்போதுஉன் இன்பசுகத்து எய்துவேன் - எப்போதும்நித்தியா சுத்தா நிராமயா சொல்தவறாச்
சத்தியா சொக்கநா தா.
பொருள்:
- என்றும் அழிவற்றவனே! பரிசுத்தமானவனே! மலநோயற்றவனே! ஒரு காலத்தும் பொய்யாகாத வரத்தைத் தருபவனே! சொக்கநாதப் பெருமானே! எப்போதும், எங்கும், பரிபூரணமாய், துன்பத்தொடு கூடாத இன்பத்தை அடைவேன்? சொல்லி அருள்க! விரைவில் இவற்றைதந்தருள்க
- சிவாயநம! சிவாயநம! சிவாயநம!திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!

