குருவருள்

குருவருள்
குருவே சரணம்

செவ்வாய், 21 ஜூலை, 2015

தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சிவபோக சாரம்” பாடல் எண் -24


பாவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே - திரமாக
நில்லென்றான் கண்ட எல்லாம் நேதி பண்ணி மும்மலமுங்
கொல்லென்றான் ஞான குரு.

பொருள் : என்னுடைய ஞான குரவர் “ மனம் முதலிய கருவிகள்  வியாபாரித்துச் சென்று அணுக ஒண்ணாத சிவத்தை அடைதற்கு மாயா காரியங்களாகிய கேவல சகலங்கள் நீங்கிய நிலையின் கண்னே ஒருபொழுதும் நீங்காது நிலையாக நில்” என்றார். மேலும் ” அவ்வாறு நிற்கும்
பொழுது  மல மாயா கன்மங்களின் சேட்டிப்புத் தொன்ற வருமாயின் எமது அருள் உரையினை பற்றுக் கோடாக அவற்றை இவை பொருள் அல்ல எனக் கழிக்கு மாற்றால் பற்றறக் களை என்றும் அருளிச் செய்தார். 

தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சொக்கநாதர் வெண்பா” பாடல் எண் : 24




தவமோ சிறிதறியேன் தாரணிமேல் செய்யும்
அவமோ அளவில்லை யானால் சிவமோ
பெறுமாறென் கூடற் பிரானேமுப் பாசம் 
அறுமாறென் சொக்கநா தா.

பொருள்:  மதுரைத் தலைவனே! சொக்கநாதப் பெருமானே! நான் தவச் செயலையோ சிறிதும் அறிந்திலேன். இவுலகைல் நான் செய்யும் அவச் செயல்களுக்கோ ஓர் அளவில்லை இவ்வாறு இருக்கும் பொழுது எனது மும்மலங்களும்(ஆணவம்,கன்மம்,மாயை) நீங்கும் வழி யாது? அவை நீங்க நான் சிவத்தைப் பெறும் வழிதான் யாது? நீதான் அதனைத் தெரிவித்து அருளல் வேண்டும்

சிவாயநம! சிவாயநம! சிவாயநம!
திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!

திங்கள், 1 ஜூன், 2015

”தருமை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய ”சொக்கநாதர் வெண்பா” பாடல் எண் - 12




எப்போது மும்மலம் விட்டேறுவேன் பூரணமாய்
எப்போதுஉன் இன்பசுகத்து எய்துவேன் - எப்போதும்
நித்தியா சுத்தா நிராமயா சொல்தவறாச்
சத்தியா சொக்கநா தா.

பொருள்: 


  • என்றும் அழிவற்றவனே! பரிசுத்தமானவனே! மலநோயற்றவனே! ஒரு காலத்தும் பொய்யாகாத வரத்தைத் தருபவனே! சொக்கநாதப் பெருமானே! எப்போதும், எங்கும், பரிபூரணமாய், துன்பத்தொடு கூடாத இன்பத்தை அடைவேன்? சொல்லி அருள்க! விரைவில் இவற்றைதந்தருள்க
  • சிவாயநம! சிவாயநம! சிவாயநம!
    திருக்கழுக்குன்றின் செல்வா போற்றி!