புத்தாண்டு வாழ்த்து
கலையாத கல்வியும்
குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும்
அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலும்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும்
பெரிய தொண்டரொடு கூட்டும்
அமுதீசர் ஒருபாகம் அகலாத
அபிராமி அம்மையே அருளுவாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக