குருவருள்

குருவருள்
குருவே சரணம்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

சங்க இலக்கியச் சுவை - பகுதி [01]

 புறநானூறு    
192  யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !

பாடியவர் : கணியன் பூங்குன்றனார்
திணை :     பொதுவியல்
                 எல்லாத் திணைகளுக்கும் பொதுவானத் தன்மையை உரைத்தல்.]
துறை:        பொருண்மொழிக் காஞ்சி
                [ உயிர்க்கு உறுதி தரும் சிறப்புப் பொருளை உரைத்தல் ]

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிந்தன்றும் இலமே; முனிவின்             5

இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தன் துளி தலைஇ, ஆனாது 
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் 
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்                       10

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் 
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.               13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக