பாவிமனம் போகாப் பரத்தடைய நாளும்
இரவுபகல் அற்ற இடத்தே - திரமாக
நில்லென்றான் கண்ட எல்லாம் நேதி பண்ணி மும்மலமுங்
கொல்லென்றான் ஞான குரு.
பொருள் : என்னுடைய ஞான குரவர் “ மனம் முதலிய கருவிகள் வியாபாரித்துச் சென்று அணுக ஒண்ணாத சிவத்தை அடைதற்கு மாயா காரியங்களாகிய கேவல சகலங்கள் நீங்கிய நிலையின் கண்னே ஒருபொழுதும் நீங்காது நிலையாக நில்” என்றார். மேலும் ” அவ்வாறு நிற்கும்
பொழுது மல மாயா கன்மங்களின் சேட்டிப்புத் தொன்ற வருமாயின் எமது அருள் உரையினை பற்றுக் கோடாக அவற்றை இவை பொருள் அல்ல எனக் கழிக்கு மாற்றால் பற்றறக் களை என்றும் அருளிச் செய்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக